மரியாதை… எங்கே.. ஏன் மட்டம்… - செண்பக ஜெகதீசன்

Photo by Tengyart on Unsplash

01.!
மரியாதை…!
-------------!
எங்கள் மந்தையில் !
கறுப்பு ஆடுகள்தான் !
கண்டுகொள்ளப்படுகின்றன, !
வெள்ளை ஆடுகள் !
வெறுக்கப்படுகின்றன, !
விரட்டி அடிக்கப்படுகின்றன –!
நாங்கள் !
வான்மேகங்கள்…!!
!
02.!
எங்கே…!
--------- !
நாயது சுருட்டிவைத்திருக்குது!
நன்றியை!
நன்றாய்த் தன்வாலில், !
அதன்!
எஜமான் அதை!
எங்கே வைத்திருக்கிறான் !
என்பதே தெரியவில்லை…!!
!
03.!
ஏன் மட்டம்…!
--------------!
பூமிக்குப் போர்வையாய் !
பச்சைக் கம்பளம் - !
அநதப் புல்வெளியில் தெரிகிறது !
அகிலத்தின் அழகு, !
அழித்து அதைமேயும் !
ஆட்டு மந்தை, !
ஆடுகளை வேட்டையாடும் !
ஓநாய்க் கூட்டம், !
ஓட ஓட விரட்டி !
ஓநாயை; கொல்லும் !
கொம்பன் காளை, !
அதன் !
ஜம்பம் பலிப்பதில்லை !
சிங்கத்திடம் - !
அடிபட்டு ஆவி துறக்கிறது.. !
இப்படித்தான் செல்கிறது !
இதையே சொல்கிறது !
இயற்கைச் சட்டம்…! !
இந்த மனிதன்மட்டும் !
ஏனித்தனை மட்டம் - !
தனியே ஒரு சட்டம் !
தன்னினத்தையே !
அழித்திட மட்டும்…!!
-செண்பக ஜெகதீசன்…!
()
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.